leadimage

    ஈழத்தின் முற்போக்கு இலக்கியமும் பிரேம்ஜியும்

    தோற்றுவாய்: ‘பிரேம்ஜி’ என்ற புனைபெயர் தாங்கிய திரு.ஸ்ரீகதிர்காம தேவஞானசுந்தரம் அவர்கள் (17-11-1930), ‘இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம்’ என்ற அமைப்பின் செயலாளராக ஏறத்தாழ அரை நூற்றாண்டுக் காலம் தொடர்ந்து செயற்பட்டு வந்துள்ளவர். அப்பொறுப்பின் அடிப்படையில் மேற்படி இலக்கிய இயக்கத்தின் செயல்திட்டங்களை வகுப்பதிலும் அவ்வாறு வகுக்கப்பட்ட திட்டங்களைச் செயல்வடிவம் பெறச்செய்து சமூகத்தளம் நோக்கி இட்டு வருவதிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பு செய்து வந்துள்ளவர், அவர். அவ்வாறான செயற்பாடுகளின் ஒரு பகுதியாக அவர் எழுத்தில் பதிவு செய்தவற்றுள் ஒரு பகுதியே இங்கு […]

    [மேலும் வாசிக்க...]

சிறப்புக் கட்டுரைகள்

featuredimage இரக்கமற்ற இரவுகளின் வலி

உலகம் பூராவிலுமுள்ள அரசுகளும், அரசை நோக்கிய போராட்டங்களை நடத்தும் இயக்கங்களும் தமது கருத்துகளுக்கான மாற்றுக்கருத்துக்கள் உருவாகுவதை ஏனோவிரும்புவதில்லை. அவர்கள் தாம் ஒரு பரந்த தளத்தில் திறந்த மனத்துடன் ...

featuredimage சின்னத் தம்பி

எனது வகுப்பில் இருந்து முப்பத்தி ஏழு மாணவர்கள் மற்றும் வகுப்பாசிரியை திருமதி பிரகாஸ்பதி முன்பாக எனது பிட்டத்தில் அதிபர் ராஐகோபால் ஆறு தடைவை ஓங்கிப் பிரம்பால் அடித்தார். ...

featuredimage ஈழ தேசிய சினிமா: கனவிலிருந்து மெய்மையை நோக்கி

திரைப்படங்கள் இன்று புவிப்பரப்பும் சார்ந்தும், கலாச்சாரம் சார்ந்தும், இன்னும் குறிப்பாக தேசம் சார்ந்தும்தான் அதனது அடையாளங்கள் வகைப்படுத்தப்படுகின்றன. அமெரிக்க சினிமா, ஐரோப்பிய சினிமா, இலத்தீனமெரிக்க சினிமா, ஆப்ரிக்க ...

featuredimage உடலழகன் போட்டி

உடலழகன் போட்டிக்கு போவதென்பது முடிவாகிவிட்டது. இதற்கு முன்னர் நான் அப்படியான ஒரு போட்டியை பார்க்க எங்கேயும் போனதில்லை. பிரச்சினை என்னவென்றால் நான் ரொறொன்ரோவில் இருந்தேன், போட்டி 350 ...

கட்டுரைகள்

இரத்தம் சிந்தும் இதயங்கள்

சில மாதங்களுக்கு முன்னர் திரு. பாலமனோகரன் எழுதி வெளியிட்ட ‘இரத்தம் சிந்தும் இதயங்கள்’ அல்லது ‘Bleeding Hearts’ என்னும் நாவலைப்பற்றி ஒரு சில வார்த்தைகள் கூறுமாறு திரு. முரளி கேட்டிருந்தார். ஈழத்து இலக்கிய வரலாற்றிலே மைல் கல்லாக, திருப்புமுனையாக அமைந்த ‘நிலக்கிளி’ என்னும் நாவலின் ஆசிரியருடைய ஆங்கிலப்படைப்பை பற்றி பேசுவதற்கு சந்தர்ப்பம் கொடுத்த முரளிக்கு நன்றியைக் கூறிக்கொள்ள விரும்புகின்றேன். (more…)

பூரண சுதந்திரம் வேண்டி

நடந்தது, 1920தைத் தொடர்ந்து வந்த ஒரு சில வருடங்கள். அது சரித்திரம். அறிந்தவர்கள் ஞாபகத்தில் கொண்டு வரவேண்டியது அவசியம்

1. சந்திப்பு: ஒருவர் பொ. நாகலிங்கம், யாழ்பரமேஸ்வராக்கல்லூரி மாணவர். பரமேஸ்வராக் கல்லூரி எங்கே எனக் கேட்காதீர்கள் யாழ் பல்கலைக் கழகம் ஏப்பம் விட்டு விட்டது. நாகலிங்கம் இளவயது முதலே இடதுசாரிக் கொள்கையில் மாய்ந்தவர். பின்னாளில் இலங்கா சமசமாஜக் கட்சி சார்பாக சில தடவைகள் தேர்தலில் போட்டியிட்டு தோல்விகண்டு களைத்துப் போய் ஒதுங்கிக் கொண்டவர். (more…)

சிறுகதைகள்

கனவும் நனவும் – William Boyd – தமிழாக்கம்

காலை ஆறு மணி. எங்கள் சமையலறையில் நான். எனது பார்வை வெளியே. வளவில் கொல்லை. நீள்சதுர வடிவில் கூம்பிய புல்தரை. அந்தலையில் பழம்பெரும் எலுமிச்சை. அதற்கப்பால் சாய்ந்தெழும் சூரியன். புல்பூண்டுகளைத் தொடுத்து அடர்ந்து படர்ந்த சிலந்திவலை. காலை வெயிலில் ஒளிரும் அதன் வெண்மை. பூமி சுழல, கதிரவன் மேலெழும் அந்த ஒருசில நொடிகளில் ஒரு கேடயம்போல் எங்கள் புல்தரை பளிச்சிடும். நான் ஒருகணம் மெய்மறப்பேன் (more…)

கூட்டிச் செல்லும் குரல்

காலையில் எழுந்து நடக்கத் தொடங்கினான் மாணங்கி. விரும்பியே அலையும் மனநிலையொன்றின் காரணமென்ன என்ற கேள்வியொன்றை யோசித்தபடி…… சிந்திப்பதற்கும்,நடத்தலுக்குமான தொடர்பு வெறும் பளக்கத்தால் வந்ததாகத் தெரியவில்லை. நடக்கும்போதில் கால்களாலேயே சிந்திப்பது போன்றதொரு புரிதல் அவனுள்ளே நிகழ்ந்தபடியே இருக்கிறது. அவன் நடந்துகொண்டிருந்தான்………… செல் பேசிமணி ஒலித்தது எடுத்தபோது மறுபுறத்தில் கரகரத்ததொரு குரல்/ எங்கே நிற்கிறாய்? நான் நடந்துகொண்டிருக்கிறேன்….. யாரோடு போகிறாய்? நானும்,நானும்,நானும்… நான்களோடு…. சரி…. எங்கே போகிறாய்? (more…)

கவிதைகள்

காட்சி

உச்சாணிக்கிளைக்குக் கீழ்க்கிளை
அமர்ந்த பறவை
‘தெரியும்’ ‘தெரியும்’
என்று அலறியது
வான் நோக்கி.
அணில்கள் தாவி மறைந்தன
‘அப்படியா’ எனக் கேட்டு
பறந்தமர்ந்தன அருகாமைப்
பறவைகள்
‘தெரிந்தால்தான் என்ன?’
என உச்சாணிக்கிளைப்
பறவையின் உச்சாடனம்.
மரம் முழுவதும் கிளைகள்
கிளைகள்தோறும் பறவைகள்.
‘தெரியுமே’ என்றது
கானகம்.

ஒரு கவிதையும் : குறிப்புகள் மூன்றும்

என் துக்கத்தின்மீது பொழியும்
அளவு கடந்த
முரட்டுத்தனமான பனிப் பொழிவை
உன்னில் சுமத்துவதற்கில்லை

தளர்ந்த மூதாட்டியின் பொறுமையோடு
அதனை அகற்ற முயல்கிறேன்
(more…)

நேர்காணல்கள்

குலசிங்கம் சந்திப்பு

திரு.து.குலசிங்கம் ஈழத்தின் இலக்கியப்பரப்பில் தனது ஆழமான தேடல்மிகு வாசிப்பனுபவங்களினால் கவனிப்புக்குரியவராகின்றார். ஈழத்தின் வடபகுதியில் அமைந்திருக்கும் கடலோர நகரான பருத்தித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர், உதயன் புத்தக நிலையத்தின் உரிமையாளாராக அண்மைக்காலம் வரையிருந்தார். தவிர்க்கமுடியாத காரணங்களினால் தமிழகத்திற்கும் ஈழத்திற்குமிடையில் நாடோடியாகப் பயணித்துக் கொண்டிருந்தார். புனைகதைசாரா எழுத்துருக்களின் மூலம் தனது இலக்கியப் பங்களிப்பினை ‘ஆத்மஜோதி’ எனும் சஞ்சிகையில் (1967) ஆன்மீகம் பற்றிய கேள்வியை எழுப்பிய கட்டுரையுடன் ஆரம்பித்து ‘அம்மாவ்’, ‘ஒசை’, ‘மௌனம்’, ‘வேர்கள்’, ‘கனவு’, ‘மல்லிகை’ஆகிய சிற்றிதழ்களில் கட்டுரைகள், கடிதங்கள் எனும் வகையில் தொடர்கிறார். (more…)

பத்தி

கடுதாசி நூல்களும், கையொப்பங்களும் – சச்சிதானந்தன் சுகிர்தராஜா

என்னுடைய சமீபத்திய விமான பயனங்களில் என் கண்களை உறுத்திய ஒரு காரியம் வழக்கமான கடுதாசி புத்தகங்களுக்குப் பதிலாக பயனிகளின் கைகளிலிருந்த மின்-வாசிப்பான்கள் (e-reader) அல்லது இணைய பலகைகள் (ipad). லக்கமாக்கபட்ட இந்த நாட்களின் நம்முடைய வாசிப்பு முறை மாறிவருகிறது. முக்கியமாக Kindle, Nook போன்ற வாசிப்புக் கருவிகள் வாசிப்பைத் தொழில் நுட்பமாக்கியிருக்கின்றன. இதைத் தெரிந்து கொள்வதக்கு மானிடவியல் அறிவு தேவையில்லை. பொதுவிடங்களில் இருக்கும் போது சும்மா உங்கள் கண்களை சுழலவிட்டாலே தெரிந்துவிடும். (more…)

சந்திரன்தான் குற்றவாளி – அ.முத்துலிங்கம்

சமீபத்தில் நான் ஒரு தகவல் படித்தேன். சரியாக நூறு ஆண்டுகளுக்கு முன்னர் மூழ்கிய டைட்டானிக் கப்பலின் விபத்துக்கான உண்மைக் காரணத்தை சில வானியல் நிபுணர்கள் ஆராய்ந்து கண்டுபிடித்திருக்கிறார்கள். காரணம் சந்திரன்தான். சந்திரன் பூமிக்கு மிக அருகாமையில் வந்திருந்தான். கடந்த 1400 வருடங்களில் சந்திரன் பூமிக்கு ஆகக் கிட்ட வந்தது விபத்து நேர்ந்த வருடத்தில்தான். அத்துடன் பூமியும் அதன் பாதையில் சூரியனுக்கு கிட்டவாக அணுகியிருந்தது. இவை எல்லாம் சேர்ந்து மிகப்பெரிய ஆழி அலைகளை உருவாக்கி அவை என்றுமில்லாத விதமாக பனிப்பாறைகளை உடைத்து தெற்கு நோக்கி நகர்த்தியிருக்கின்றன. கப்பல் பாதையில் மிதந்த பனிப்பாறையில் டைட்டானிக் கப்பல் மோதி 1500 பேர் இறந்திருக்கிறார்கள். இதற்கு காரணம் சந்திரன்தான் என்று நிபுணர் குழுவின் தலைவர் டொனால்ட் ஒல்சன் அறிவித்திருக்கிறார்.
இதைப் படித்தபோது எனக்கு சில மாதங்களுக்கு முன்னர் படித்த ஜிம் ஹாரிஸனின் Songs of Unreason என்ற கவிதை நூல் நினைவுக்கு வந்தது. அவருடைய ஒரு கவிதை இப்படிப் போகிறது. (more…)