All entries by this author

யூலை 14, 2012 தமிழும் கடலும் காலம் இலக்கிய நிகழ்வு

Jul 11th, 2012 | By | Category: அறிவித்தல்கள், நிகழ்வுகள்


மே 20, 2012 காலம் இலக்கிய இரவு – அறிமுகமும் வெளியீடும்

May 16th, 2012 | By | Category: அறிவித்தல்கள்


ஏப்பிரல் 28, 2012 – வாழும் தமிழ்: புத்தகக் கண்காட்சி, இலக்கியக் கருத்தரங்கு

May 16th, 2012 | By | Category: அறிவித்தல்கள்


ஒக்டோபர் 13, 2011 பெயரிடாத நட்சத்திரங்கள் – ஈழப் பெண் போராளிகளின் கவிதை நூல் வெளியீட்டு விழா

Nov 5th, 2011 | By | Category: அறிவித்தல்கள்

 
 
 



சூன் 19, 2011 நனவிடை தேய்தல் – எஸ். பொ சந்திப்பு

Jun 17th, 2011 | By | Category: அறிவித்தல்கள், நிகழ்வுகள்


11 சூன் 2011 வாழும் தமிழ் – தமிழ் புத்தகக் கண்காட்சி

Jun 9th, 2011 | By | Category: அறிவித்தல்கள், நிகழ்வுகள்


போதிமரம்

Nov 22nd, 2010 | By | Category: Uncategorized

போதிமரம்
என்னை விறுக்கென்று கடந்த
உன் விழிகளில்
முன்னரிலும் முள்ளடர்ந்திருந்தது.
உன் உதட்டினுள்
துருதுருக்கும் கத்திமுனை
என் தொண்டைக்குழியை வேட்கிறது
மாறிவிட்டன நமதிடங்கள்
துடிப்படங்கும் மீனாக நான் தøμயில்
துள்ளி நீர் கிழித்தபடி
நீ கடலில்.
துரோகிதியாகிச் சட்டைகள் அவிழ்ந்துவிழ
சற்றுமுன்பே
அம்மணமானோம்.
இடுகாட்டில் குளிர்காயும்
குற்றவுணர்வில்
எரிகிறது எரிகிறது தேகம்
நம் அட்டைக்கத்திகளில்
எவரவரின் குருதியோ வழிகிறது
நாம் இசைத்த பாடல்களைப்
பிரித்துப் பார்த்தேன்
ஒழுகிற்று
ஊரும் உயிரும் இழந்த
பல்லாயிரவரின் ஒப்பாரிகள்
வன்மம் உதிர்த்து
வந்தொருக்கால்
அணைத்துவிட்டுப் போய்த்தொலையேன்
மரணம் என்ற போதிமரத்தின்கீழ்
நிழலில்லை
நீயுமில்லை
நானுமில்லை
வதைமுகாம் மனிதர்களின்
கண்ணீர் இலையுதிர்ந்து கிடக்கிறது
தோற்றவரின் வேதம் என்பாய்
சரணாகதி என்பாய்
போடீ போ!
இனி இழக்க
எவரிடமும் எந்த மயிருமில்லை!



மூன்று பூனைகள் பற்றிய ஏழு குறிப்புகள்

Nov 21st, 2010 | By | Category: Uncategorized

பூபாலசிங்கம் புத்தக நிலையத்திற்குச் செல்ல வேண்டும். செட்டியார் தெருவில் நடந்துகொண்டிருந்தேன். பொன்னந்தியில் செட்டித்தெருவில் நடப்பதே பெரும்பாடு. கோயில்கள் நிறைந்த வீதி மருங்கில் ஆராதனையும் ஊது பத்திப்புகையும், மணியோசையும் ஒரு கதம்பமாய் தெருவில் கவிந்திருந்தது. கூந்தலில் பூக்கள் மலர்ந்த பெண்கள் மகிழ்ச்சியுடனும் பக்திப்பரவசத்துடனும் கோயில் நடையில் காத்திருந்தனர். அப்போதுதான் யதேச்சையாகக் கவனித்தேன். இரண்டு பூனைகள் எதிரே வந்து கொண்டிருந்தன. இரண்டும் எனது கிராமத்தின் மண் வீட்டுப் பீலிக்குள் முன்பு வாழ்ந்தவை. ஒன்று வறண்டு மெலிந்திருந்தது. பஞ்சத்தில் பாவப்பட்ட […]



ஆனந்தியின் மோட்டார் சைக்கிள்

Nov 21st, 2010 | By | Category: Uncategorized, இதழ் 33

ஆனந்தி, எனது நண்பன் ஒருவனின் தங்கை. அழகி. இந்த நண்பன் எனக்கு அறிமுகமாக முன்னதாகவே ஆனந்தியை எனக்குத் தெரியும். ஆனந்தி நான் படித்த அதே கல்லூரியில் படித்தவர். ஒரே ஊர். ஆனந்தியின் அம்மா ஒரு கோபக்காரி. தான் பிழை என்று ஒரு விடயத்தை நினைத்துவிட்டால் அதற்காக உருத்திரதாண்டவம் ஆடத்தயாரான ஒரு தாயார்.
ஒரு நாள் பலாலி வீதியால் சென்றுகொண்டிருந்த என்னை ஆனந்தியின் அம்மா ஆனந்தியின் மோட்டார் சைக்கிள் வழிமறித்தார். “சிவா, எனது மருமகனின் (ஆனந்தியின் கணவர் ) […]



தூக்கமாத்திரைகள்

Nov 21st, 2010 | By | Category: கவிதைகள்

…………….
…………….
அதன்பிறகு
“பிரிட்டன்’ ஒன்றை விழுங்குவதிலிருந்து
உறங்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டேன்
எப்போதும் புதிய பதில்கள் இருந்து வந்திருக்கின்றன
ஏன் நித்திரைசெய்ய முடிவதில்லை என்ற கேள்விக்கு