All entries by this author

ஈழத்தின் முற்போக்கு இலக்கியமும் பிரேம்ஜியும்

Nov 5th, 2011 | By | Category: Lead Articles, இதழ் 34

தோற்றுவாய்: ‘பிரேம்ஜி’ என்ற புனைபெயர் தாங்கிய திரு.ஸ்ரீகதிர்காம தேவஞானசுந்தரம் அவர்கள் (17-11-1930), ‘இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம்’ என்ற அமைப்பின் செயலாளராக ஏறத்தாழ அரை நூற்றாண்டுக் காலம் தொடர்ந்து செயற்பட்டு வந்துள்ளவர். அப்பொறுப்பின் அடிப்படையில் மேற்படி இலக்கிய இயக்கத்தின் செயல்திட்டங்களை வகுப்பதிலும் அவ்வாறு வகுக்கப்பட்ட திட்டங்களைச் செயல்வடிவம் பெறச்செய்து சமூகத்தளம் நோக்கி இட்டு வருவதிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பு செய்து வந்துள்ளவர், அவர். அவ்வாறான செயற்பாடுகளின் ஒரு பகுதியாக அவர் எழுத்தில் பதிவு செய்தவற்றுள் ஒரு பகுதியே இங்கு […]



தெணியான் என்ற நாவலாசிரியர்

Oct 23rd, 2010 | By | Category: Lead Articles

தெணியான் என்ற புனைபெயர் தாங்கிய கந்தையா நடேசன் அவர்கள் ஈழத்தின் சமகாலத் தமிழிலக்கிய வரலாற்றிலே  தனிக்கவனத்துக்குரிய இலக்கியவாதிகளுள் ஒருவருமாகத் திகழ்ந்து வருபவர். இலக்கியத்தின் சமுதாயப் பணியை வற்புறுத்தி நிற்கும் முற் போக்குப் பார்வை கொண்ட இலக்கியவாதியான இவர், புனைகதைப் படைப்பாளியாகவும் விமர்சனங்கள் மற்றும் விவாதங்கள் ஆகியவற்றில் ஈடுபடும் சிந்தனையாளராகவும் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டவர். ஒரு படைப்பாளி என்ற வகையில் இவர் தன்னைச் சூழவுள்ள சமூகத்தின் முரண்பாகள், சிறுமைகள் மற்றும் அறியாமைசார் அவலங்கள் முதலியவற்றைத் தோலுரித்துக்காட்ட முற்பட்டு […]