கவிதைகள்

காட்சி

Nov 5th, 2011 | By | Category: இதழ் 34, கவிதைகள்

உச்சாணிக்கிளைக்குக் கீழ்க்கிளை
அமர்ந்த பறவை
‘தெரியும்’ ‘தெரியும்’
என்று அலறியது
வான் நோக்கி.
அணில்கள் தாவி மறைந்தன
‘அப்படியா’ எனக் கேட்டு
பறந்தமர்ந்தன அருகாமைப்
பறவைகள்
‘தெரிந்தால்தான் என்ன?’
என உச்சாணிக்கிளைப்
பறவையின் உச்சாடனம்.
மரம் முழுவதும் கிளைகள்
கிளைகள்தோறும் பறவைகள்.
‘தெரியுமே’ என்றது
கானகம்.ஒரு கவிதையும் : குறிப்புகள் மூன்றும்

Nov 5th, 2011 | By | Category: இதழ் 34, கவிதைகள்

என் துக்கத்தின்மீது பொழியும்
அளவு கடந்த
முரட்டுத்தனமான பனிப் பொழிவை
உன்னில் சுமத்துவதற்கில்லை
தளர்ந்த மூதாட்டியின் பொறுமையோடு
அதனை அகற்ற முயல்கிறேன்வேசியின் மகன்

Nov 5th, 2011 | By | Category: இதழ் 34, கவிதைகள்

இரவை
என் இரண்டு
கண்களாலும் உறங்குகிறேன்
வேசியின் மகன்
என் அற்புத இரவில் ஒன்றை
கடன் வாங்கிச் சென்றதால்
மீள இயலா உறக்கத்தில்
மேலும் இரண்டு நாட்கள்
உறக்கத்திலேயே கரைந்து போயிற்று.சிவப்பு பலூன்

Nov 5th, 2011 | By | Category: இதழ் 34, கவிதைகள்

மகள் என் வயிற்றின் மீது
விளையாடிக்கொண்டிருக்கிறாள்
இடுப்பின் கீழே என் குறிமிதித்து
அவள் வானேறுகிறாள்
நான் அவளைத் தொடவேயில்லை
இரவு
அனைவரும் ஞாபகத்தில் வந்துபோகின்றனர்திருப்பாடுகளின் குறிப்புகள்

Nov 5th, 2011 | By | Category: இதழ் 34, கவிதைகள்

துயர் இறங்கி வரும் அகதியாய்
சுற்றும் முற்றும் இழந்து
அண்ணன் குடும்பத்தோடு
வீதியில் நடந்து கொண்டிருந்தேன்.
மேலே வானில் கெலியும் பொம்பரும்
கீழே எங்கணும் கண்ணி வெடி
விதைக்கப்பட்டிருக்கலாம் என்ற
மனப்பயத்துடன் மெல்ல மெல்ல..
தோளில் சுமையுடன்தூக்கமாத்திரைகள்

Nov 21st, 2010 | By | Category: கவிதைகள்

…………….
…………….
அதன்பிறகு
“பிரிட்டன்’ ஒன்றை விழுங்குவதிலிருந்து
உறங்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டேன்
எப்போதும் புதிய பதில்கள் இருந்து வந்திருக்கின்றன
ஏன் நித்திரைசெய்ய முடிவதில்லை என்ற கேள்விக்குமுந்திரிமரத்தில் மழைத்துளிகள்

Nov 7th, 2010 | By | Category: இதழ் 33, கவிதைகள்

அது
காதலுக்கு அருகில் இருந்தது.
மிக அருகில்.
உக்கிரமிக்க யுத்த நிலத்தில் நீயும்
கண்காணிப்பும் அச்சமுமான பயணத்தில் நானும்
வாழ்வை எழுதிக் கொண்டிருந்தோம்
இழப்புகள் உயிரில்
கனவுகள் கண்களில் சேர்ந்திருந்தன