இதழ் 33

நாங்கள் அவர்கள்

Nov 29th, 2010 | By | Category: இதழ் 33, கட்டுரைகள்

அம்மா, அப்பா, நான்
அக்கா, தம்பி, சித்தி
நாங்கள் எல்லாம் நாங்கள்.
அலைக்கு அப்பால் வாழும்
அந்த, இந்த ஆட்கள்…
அவர்கள் எல்லாம் அவர்கள்.
ஏறத்தாழ ஒரு நூற்றாண்டுக்கு முன்பு,நாங்கள் அவர்கள் என்னும் தலைப்பில் கிப்ளிங் (Rudyard Kipling,18651936) எழுதிய ஒரு கவிதையின் தொடக்கம் (மேலே எழுந்தமானமாக மொழி பெயர்க்கப்பட்டுள்ளது). ஓர் உலகளாவிய உண்மையை அவர் இங்கு உணர்த்தியிருக்கிறார். எனினும், அனைத்துத் தரப்பினரையும் விளித்து அவர் இதனை எடுத்துரைக்கவில்லை.இனங்களின் கோடுகளை அழித்து அதிகாரத்தை எதிர்த்து வாழ்தல்

Nov 22nd, 2010 | By | Category: இதழ் 33, கட்டுரைகள்

ஒவ்வொருவருடைய வாழ்வும் அவரவர்கள் வாழ்கின்ற காலத்தையும், இருக்கின்ற சமூகங்களையும் பொறுத்து வேறுபடக் கூடியது. அனைத்து நிலப் பரப்புகளுக்கும் நம்மால் எப்படி பயணிக்க முடியாதோ, அவ்வாறே நம்மால் எல்லோருடைய வாழ்வையும் வாழ்ந்து பார்க்கவும் முடியாது. ஆனால் எம்மால் வெவ்வேறு வாழ்க்கை முறைகளையும், கலாசார பண்பாட்டுப் பின்புலங்களையும் வேறு வகைகளால் விளங்கிக் கொள்ள முயல முடியும்.ஆனந்தியின் மோட்டார் சைக்கிள்

Nov 21st, 2010 | By | Category: Uncategorized, இதழ் 33

ஆனந்தி, எனது நண்பன் ஒருவனின் தங்கை. அழகி. இந்த நண்பன் எனக்கு அறிமுகமாக முன்னதாகவே ஆனந்தியை எனக்குத் தெரியும். ஆனந்தி நான் படித்த அதே கல்லூரியில் படித்தவர். ஒரே ஊர். ஆனந்தியின் அம்மா ஒரு கோபக்காரி. தான் பிழை என்று ஒரு விடயத்தை நினைத்துவிட்டால் அதற்காக உருத்திரதாண்டவம் ஆடத்தயாரான ஒரு தாயார்.
ஒரு நாள் பலாலி வீதியால் சென்றுகொண்டிருந்த என்னை ஆனந்தியின் அம்மா ஆனந்தியின் மோட்டார் சைக்கிள் வழிமறித்தார். “சிவா, எனது மருமகனின் (ஆனந்தியின் கணவர் ) […]புத்தகங்களும் கதைகளும்

Nov 21st, 2010 | By | Category: இதழ் 33, பத்தி

புத்தகங்களில் கதைகள் இருக்கும். ஆனால் புத்தகங்களுக்குப் பின்னாலும் கதைகள் இருக்கின்றன. சில வருடங்களுக்கு முன் நான் ‘The Guardian Saturday Review’ படித்துக் கொண்டிருந்தபோது ஒரு நாவலின் விமர்சனம் என் கண்களை ஈர்த்தது. நூலின் பெயர் 3 for 24 எழுதிய ஆசிரியர் Jennie Walker. கிரிக்கட் ஸ்கோர் தலைப்பு கொண்ட நூல்கள் எத்தனை இருக்கிறது என்பதைவிட என்னுடைய கவனத்தை கவர்ந்ததுக்கான காரணம் வர்ணையாளரின் முதல் வரிகள்: இந்த புத்கத்தை வாங்க விரும்பினால் நூலை வெளியிட்ட CB […]‘பொற்சிறையில் வாடும் புனிதர்கள்’ விடிவை நோக்கிக் குரலெழுப்பியவர்

Nov 7th, 2010 | By | Category: இதழ் 33, கட்டுரைகள்

தொதாண்ணூறுகளில் நண்பர் ராஜஸ்ரீகாந்தன், தெணியானின் “பொற்சிறையில் வாடும் புனிதர்கள்’ நாவலின் சில பிரதிகளை அவுஸ்திரேலியாவுக்கு வருகை தந்த ஒரு குடும்ப நண்பரிடம் கொடுத்தனுப்பியிருக்கிறார். அந்த நண்பரின் குடும்பம் அவுஸ்திரேலியாவில் வசிப்பதற்குக் குடியுரிமை பெற்று வந்தது.உளவியல் நோக்கில் தெணியானின் காத்திருப்பு

Nov 7th, 2010 | By | Category: இதழ் 33, கட்டுரைகள்

இலங்கையின் முற்போக்கு இலக்கியப்பாரம்பரியத்தின் மூன்றாவது தலைமுறையினருள் முக்கியமான ஒருவராகச் சுட்டப்பெறுபவர் தெணியான். ஆசிரியத்துவத்தைத் தனது தொழில்வாழ்க்கை யாக கொண்டுவிளங்கிய அவர் அக்காலத்தே தான் பெற்ற அநுபவங்களை இலக்கியக் கருப்பொருளாக்கி, சிறுகதைகளாகவும் நாவல்களாகவும் தந்துள்ளார்.தெணியானுடைய சமூக வலு

Nov 7th, 2010 | By | Category: இதழ் 33, கட்டுரைகள்

தெணியானுடைய இலக்கிய, அரசியல் வாழ்வையும் வளத்தையும் மதிப்பிடுவதற்கு இப்போது நல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. நமது இலக்கிய திறனாய்வு மரபில், இலக்கியச் செல்நெறிகளுக்கு வழங்கப்பட்ட ஆய்வுச் சிறப்பிடம் இலக்கிய ஆளுமைகளுக்கு வழங்கப்படவில்லை என்கிற நிலை தொடர்ந்து நிலவி வருகிறபோதும் ஆங்காங்கே சில ஆய்வு முயற்சிகள் தனித்தனி ஆளுமைகள் குறித்து இடம் பெறுவது பயன்மிக்கதாகும். அந்த வகையில் தெணியான் பற்றிய இந்த மலர் சிறப்பிடம் பெறுகிறது.வடமராட்சி வாழ்க்கையின் முன்னிலைப் புனைகதை ஆசிரியர்

Nov 7th, 2010 | By | Category: இதழ் 33, கட்டுரைகள்

குறிப்பிட்ட ஒருவரது வரலாற்றுநிலைச் சாதனையையப் புரிந்து கொள்வதற்குச் சுலபமான, அதேவேளையில் சிக்கல்கள் நிறைந்த, ஒரு முறைவழி உண்டு. அந்த அணுகுமுறை நடைமுறைச் சாத்தியமானதல்லவெனினும் ‘ஆய்வு நோக்கு அணுகு’ முறையெனுமளவில் வலுவுடையதென்பதை மறுக்க முடியாது.முந்திரிமரத்தில் மழைத்துளிகள்

Nov 7th, 2010 | By | Category: இதழ் 33, கவிதைகள்

அது
காதலுக்கு அருகில் இருந்தது.
மிக அருகில்.
உக்கிரமிக்க யுத்த நிலத்தில் நீயும்
கண்காணிப்பும் அச்சமுமான பயணத்தில் நானும்
வாழ்வை எழுதிக் கொண்டிருந்தோம்
இழப்புகள் உயிரில்
கனவுகள் கண்களில் சேர்ந்திருந்தனகாரணம் ஆயிரம்

Oct 23rd, 2010 | By | Category: இதழ் 33, சிறுகதைகள்

‘நான் ஏதாவது செய்ய வேண்டும், சுமதி. இப்படி என்னால் வாழ முடியாது’. வனிதாவுக்கு ஓரளவு மது போதையாக இருந்திருக்க வேண்டும். அரை குறை வொட்கா போத்தலும் அருகே இருந்தது. ‘உன்ர நிலைமை புரியுது வனி. நீ வாழ்ந்தேயாக வேணும். இந்தக் குழந்தைகளை விட்டிட்டு நீ ஒண்டுமே செய்ய ஏலாது.’ சுமதி வனிதாவின் குழந்தைகளை மாறிமாறிப் பார்த்தாள். அவளது கண்களில் நீர் கசிந்தது.