சிறுகதைகள்

கனவும் நனவும் – William Boyd – தமிழாக்கம்

Nov 5th, 2011 | By | Category: இதழ் 34, சிறுகதைகள்

காலை ஆறு மணி. எங்கள் சமையலறையில் நான். எனது பார்வை வெளியே. வளவில் கொல்லை. நீள்சதுர வடிவில் கூம்பிய புல்தரை. அந்தலையில் பழம்பெரும் எலுமிச்சை. அதற்கப்பால் சாய்ந்தெழும் சூரியன். புல்பூண்டுகளைத் தொடுத்து அடர்ந்து படர்ந்த சிலந்திவலை. காலை வெயிலில் ஒளிரும் அதன் வெண்மை. பூமி சுழல, கதிரவன் மேலெழும் அந்த ஒருசில நொடிகளில் ஒரு கேடயம்போல் எங்கள் புல்தரை பளிச்சிடும். நான் ஒருகணம் மெய்மறப்பேன்கூட்டிச் செல்லும் குரல்

Nov 5th, 2011 | By | Category: இதழ் 34, சிறுகதைகள்

காலையில் எழுந்து நடக்கத் தொடங்கினான் மாணங்கி. விரும்பியே அலையும் மனநிலையொன்றின் காரணமென்ன என்ற கேள்வியொன்றை யோசித்தபடி…… சிந்திப்பதற்கும்,நடத்தலுக்குமான தொடர்பு வெறும் பளக்கத்தால் வந்ததாகத் தெரியவில்லை. நடக்கும்போதில் கால்களாலேயே சிந்திப்பது போன்றதொரு புரிதல் அவனுள்ளே நிகழ்ந்தபடியே இருக்கிறது. அவன் நடந்துகொண்டிருந்தான்………… செல் பேசிமணி ஒலித்தது எடுத்தபோது மறுபுறத்தில் கரகரத்ததொரு குரல்/ எங்கே நிற்கிறாய்? நான் நடந்துகொண்டிருக்கிறேன்….. யாரோடு போகிறாய்? நானும்,நானும்,நானும்… நான்களோடு…. சரி…. எங்கே போகிறாய்?வீடு போர்த்திய இருள்

Nov 5th, 2011 | By | Category: இதழ் 34, சிறுகதைகள்

வீடு மௌனத்துள் புதைந்திருந்தது. இருள் கவ்விய முற்றத்தில் இலைகளால் போர்த்திக்கொண்டு நின்ற மாமரம் அவ்வப்போது உயிருடன் இருக்கிறேன் என்பதை சலசலத்து உணர்த்திக்காட்டியது. “கொக்குகள் மலக்குள்” மூத்தம்மா சொல்வா. முதுகில் வௌளை கோடிட்ட கொக்குகள் மரக்கிளை முழுக்க நிரம்பி வழிந்தன. அடிக்கொரு தரம் இடம் மாற்றி தூங்க எத்தனிக்கும் இரைச்சல் வீட்டுக்குள் விழுந்தது.சதுரக் கள்ளி

Nov 5th, 2011 | By | Category: இதழ் 34, சிறுகதைகள்

அன்று சனிக்கிழமை. தூக்கம் கலைந்தும் உடம்பு சுறுசுறுப்புக்குத் திரும்பாத காலை வேளை. யோசிக்க எவ்வளவோ இருந்தன. இலங்கையில் நடைபெற்றுக்கொண்டிருந்த யுத்தம் இருந்தது. கனடாவில் கொடுக்க வேண்டிய வங்கிக் கடன் பிரச்சினைகள் இருந்தன. இருந்தும் மீண்டும் மீண்டுமாய் அவனுக்கு அந்த முட்செடியின் நினைவுதான் ஏனோ எழுந்துகொண்டிருந்தது. போன கிழமையில் ஒருநாள் உயர்ந்து வளரும் அந்த முட்செடியின் மேல்பாகம் வேலிக்கு மேலால் வளர்ந்து நின்றுகொண்டிருப்பதான கனவு தோற்றமாகியிருந்தது. பற்கள்போன்ற முட்கள் தெரியும்படியான ஒரு அசுரச் சிரிப்போடு அவனை நோக்கி அது […]ஆல்பெர் காம்யூவிற்கான சிகரெட்

Nov 5th, 2011 | By | Category: சிறுகதைகள்

என் இருபத்திமூன்றாவது வயதில் ஆல்பெர் காம்யூவுடன் சேர்ந்து புகைக்க வேண்டும் என்பதற்காக தினம் ஓரு சிகரெட்டை வாங்கி வரத் துவங்கினேன். படித்து வேலை தேடிக் கொண்டிருந்த நாட்கள் அவை.
புத்தகமும் தேநீரும் சிகரெட்டும் மனம் முழுவதும் வலியும் கூட இருந்தன. வீடு அந்நியமாகியிருந்தது. நண்பர்களிடம் பேசுவது கூட கூச்சம் தருவதாக மாறியிருந்தது. சிகரெட் மட்டுமே துணை. அந்த நாட்களில் நான் மிகவும் தனியனாக இருந்தேன்.யாழ்ப்பாணியின் சோக வாக்குமூலம்

Nov 5th, 2011 | By | Category: இதழ் 34, சிறுகதைகள்

அவளைக் காணவில்லை என்று தெரிந்தபோது நான் பெரிதாக முதலில் எடுத்துக்கொள்ளவில்லை. வகுப்பு முடிந்தவுடன் வழமையாகச் சந்திக்கும் இடத்தில் அவள் இல்லாதபோது வேறெதனும் வேலையாகப் போயிருப்பாள் -தாமதமாக வரலாம்- என்று காத்துக்கொண்டிருக்கத் தொடங்கினேன். கோடை காலத்தில் இந்த வளாகத்தைச் சுற்றி ஓடும் நதியிற்கு அதிக வனப்பு வந்துவிடுகின்றது. படிக்கும் நாங்கள் பல்வேறு தாய்மொழிகளைப் பேசிக்கொண்டு திரிவதுபோல நதியும் கலகலப்பாகப் பலமொழிகளைப் பேசிக்கொண்டு நகர்வது போலப்பட்டது.பதுங்கு குழி

Nov 5th, 2011 | By | Category: இதழ் 34, சிறுகதைகள்

நாச்சிக்குடா வீழ்ந்ததிலிருந்து மாதவன் மனத்துள் அந்தகாரம் புகுந்துகொண்டது. இராணுவம் முன்னேறிய வேகத்தைப் பார்க்கையில் மாதவனது மனம் துவண்டுபோனது. இனிமேலும் நாம் இப்போரை வெல்லமுடியுமோ என்று ஒரு சந்தேகமுண்டாகியது. அவன் அடிக்கடி யோகபுரத்திலுள்ள தன் வீட்டுக்குப்போய், அம்மாவையும் சகோதரங்களையும் பார்த்து வருவதும் அவனது அணியின் பொறுப்பாளனுக்குப் பிடிக்கவில்லை. இப்போது தந்தைக்கு திவசம் கொடுப்பதற்காக வீட்டுக்குப் போய்க்கொண்டிருக்கிறான். தந்தைக்கான சடங்குகளைச் செய்வதற்கும் அணித் தலைவனிடம் மண்டாடியே ஒருநாள் விடுப்பு எடுத்து வந்து நிறைவேற்றவேண்டியுள்ளது. தேசத்தின் நிலமையில் மக்களின் பொருண்மியம் பெரிதும் […]காரணம் ஆயிரம்

Oct 23rd, 2010 | By | Category: இதழ் 33, சிறுகதைகள்

‘நான் ஏதாவது செய்ய வேண்டும், சுமதி. இப்படி என்னால் வாழ முடியாது’. வனிதாவுக்கு ஓரளவு மது போதையாக இருந்திருக்க வேண்டும். அரை குறை வொட்கா போத்தலும் அருகே இருந்தது. ‘உன்ர நிலைமை புரியுது வனி. நீ வாழ்ந்தேயாக வேணும். இந்தக் குழந்தைகளை விட்டிட்டு நீ ஒண்டுமே செய்ய ஏலாது.’ சுமதி வனிதாவின் குழந்தைகளை மாறிமாறிப் பார்த்தாள். அவளது கண்களில் நீர் கசிந்தது.