சிறப்புக் கட்டுரைகள்

இரக்கமற்ற இரவுகளின் வலி

Nov 5th, 2011 | By | Category: சிறப்புக் கட்டுரைகள்

உலகம் பூராவிலுமுள்ள அரசுகளும், அரசை நோக்கிய போராட்டங்களை நடத்தும் இயக்கங்களும் தமது கருத்துகளுக்கான மாற்றுக்கருத்துக்கள் உருவாகுவதை ஏனோவிரும்புவதில்லை. அவர்கள் தாம் ஒரு பரந்த தளத்தில் திறந்த மனத்துடன் இயங்குவதாகச் சொல்லிக்கொள்வார்கள். தமது ஊடகங்களில் தமது ஆட்சியைத் தக்கவைப்பதற்கான ஒரு தந்திரமாகவும் அவற்றை மேற்கொள்வார்கள். நடை முறையில் தமக்கு எதிரான கருத்துகளை முன்னெடுப்பவர்களின் இருப்பை அவர்கள் விரும்புவதில்லை. தமக்கான நலன்களின் தடைகளை அகற்றுதல் என்ற பெயரில் அவர்கள் மேற்கொள்ளும் கைதுகள், விசாரணைகள், தண்டனைகள் என்பவைகள் மிகப் பயங்கரமானவையாக இருக்கும். […]சின்னத் தம்பி

Nov 5th, 2011 | By | Category: சிறப்புக் கட்டுரைகள்

எனது வகுப்பில் இருந்து முப்பத்தி ஏழு மாணவர்கள் மற்றும் வகுப்பாசிரியை திருமதி பிரகாஸ்பதி முன்பாக எனது பிட்டத்தில் அதிபர் ராஐகோபால் ஆறு தடைவை ஓங்கிப் பிரம்பால் அடித்தார். ஆறு என்பது என்ன கணக்கு? என்பது குரூரமாக பார்த்துக் கொண்டிருந்த சக மாணவன் இராமச்சந்திரனுக்கோ, கோபத்துடன் இருந்த ஆசிரியை பிரகாஸ்பதிக்கோ, அமைதியாக இருந்த ஏனைய மாணவர்களுக்கோ, அல்லது இறுகிய மனத்துடன் விறைத்து நின்ற எனக்கும் சரி தெரியவே தெரியாது. அது அதிபர் ராஐகோபாலின் அதிஸ்ட எண்ணாகக் கூட இருக்கலாம். […]ஈழ தேசிய சினிமா: கனவிலிருந்து மெய்மையை நோக்கி

Nov 5th, 2011 | By | Category: சிறப்புக் கட்டுரைகள்

திரைப்படங்கள் இன்று புவிப்பரப்பும் சார்ந்தும், கலாச்சாரம் சார்ந்தும், இன்னும் குறிப்பாக தேசம் சார்ந்தும்தான் அதனது அடையாளங்கள் வகைப்படுத்தப்படுகின்றன. அமெரிக்க சினிமா, ஐரோப்பிய சினிமா, இலத்தீனமெரிக்க சினிமா, ஆப்ரிக்க சினிமா, ஆசிய சினிமா என்று பொதுவாகக் கண்டமெனும் புவிப்பரப்பு சார்ந்து வகைப்படுத்தப்பட்டாலும், குறிப்பிட்ட சினிமாவின் தனித்தன்மை என்பது குறிப்பிட்ட மொழிசார்ந்தும், கலாச்சாரம் சார்ந்தும, தேசம் சார்ந்தும்தான் வகைப்படுத்தப்படுகிறது.உடலழகன் போட்டி

Nov 5th, 2011 | By | Category: இதழ் 34, சிறப்புக் கட்டுரைகள்

உடலழகன் போட்டிக்கு போவதென்பது முடிவாகிவிட்டது. இதற்கு முன்னர் நான் அப்படியான ஒரு போட்டியை பார்க்க எங்கேயும் போனதில்லை. பிரச்சினை என்னவென்றால் நான் ரொறொன்ரோவில் இருந்தேன், போட்டி 350 கி.மீட்டர் தூரத்திலிருந்த ஒட்டாவாவில் நடந்தது. நான் மனைவியிடம் போட்டி எத்தனை மணிக்கு ஆரம்பம் என்று கேட்டேன். அவர் ‘காலை ஒன்பது மணி, பழைய நேரம் பத்து மணி’ என்றார்.