இதழ் 34

இரத்தம் சிந்தும் இதயங்கள்

Nov 5th, 2011 | By | Category: இதழ் 34, கட்டுரைகள்

சில மாதங்களுக்கு முன்னர் திரு. பாலமனோகரன் எழுதி வெளியிட்ட ‘இரத்தம் சிந்தும் இதயங்கள்’ அல்லது ‘Bleeding Hearts’ என்னும் நாவலைப்பற்றி ஒரு சில வார்த்தைகள் கூறுமாறு திரு. முரளி கேட்டிருந்தார். ஈழத்து இலக்கிய வரலாற்றிலே மைல் கல்லாக, திருப்புமுனையாக அமைந்த ‘நிலக்கிளி’ என்னும் நாவலின் ஆசிரியருடைய ஆங்கிலப்படைப்பை பற்றி பேசுவதற்கு சந்தர்ப்பம் கொடுத்த முரளிக்கு நன்றியைக் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.பூரண சுதந்திரம் வேண்டி

Nov 5th, 2011 | By | Category: இதழ் 34, கட்டுரைகள்

நடந்தது, 1920தைத் தொடர்ந்து வந்த ஒரு சில வருடங்கள். அது சரித்திரம். அறிந்தவர்கள் ஞாபகத்தில் கொண்டு வரவேண்டியது அவசியம்
1. சந்திப்பு: ஒருவர் பொ. நாகலிங்கம், யாழ்பரமேஸ்வராக்கல்லூரி மாணவர். பரமேஸ்வராக் கல்லூரி எங்கே எனக் கேட்காதீர்கள் யாழ் பல்கலைக் கழகம் ஏப்பம் விட்டு விட்டது. நாகலிங்கம் இளவயது முதலே இடதுசாரிக் கொள்கையில் மாய்ந்தவர். பின்னாளில் இலங்கா சமசமாஜக் கட்சி சார்பாக சில தடவைகள் தேர்தலில் போட்டியிட்டு தோல்விகண்டு களைத்துப் போய் ஒதுங்கிக் கொண்டவர்.இரண்டு காதலியர்

Nov 5th, 2011 | By | Category: இதழ் 34, கட்டுரைகள்

ஊட்டியில் மழைக்காலம் மிகவும் உக்கிரமானது. மரங்கள் மீது சாந்தியடையாத சினம் கொண்ட ஆவிகள் ஏறிக்கொண்டதுபோல, ஒரு விபரீத வரத்தால் அவை ஆவேசமான விலங்குகளாக ஆகிவிட்டதுபோல் இருக்கும். தலைசுழற்றி அவை ஊளையிடும். மார்பிலறைந்துகொண்டு தரையில் இருந்து வேர் பெயர்த்து எம்ப முயலும். ஒரு கட்டத்தில் கட்டிடங்கள் கூட உயிர்கொண்டு விடும். மிரண்ட மாபெரும் மிருகங்கள் போல அவை முனகும். விம்மும். உதடுகள் துடிக்க சிறகுகள் படபடக்க அதிரும்.உடலழகன் போட்டி

Nov 5th, 2011 | By | Category: இதழ் 34, சிறப்புக் கட்டுரைகள்

உடலழகன் போட்டிக்கு போவதென்பது முடிவாகிவிட்டது. இதற்கு முன்னர் நான் அப்படியான ஒரு போட்டியை பார்க்க எங்கேயும் போனதில்லை. பிரச்சினை என்னவென்றால் நான் ரொறொன்ரோவில் இருந்தேன், போட்டி 350 கி.மீட்டர் தூரத்திலிருந்த ஒட்டாவாவில் நடந்தது. நான் மனைவியிடம் போட்டி எத்தனை மணிக்கு ஆரம்பம் என்று கேட்டேன். அவர் ‘காலை ஒன்பது மணி, பழைய நேரம் பத்து மணி’ என்றார்.ஈழத்தின் முற்போக்கு இலக்கியமும் பிரேம்ஜியும்

Nov 5th, 2011 | By | Category: Lead Articles, இதழ் 34

தோற்றுவாய்: ‘பிரேம்ஜி’ என்ற புனைபெயர் தாங்கிய திரு.ஸ்ரீகதிர்காம தேவஞானசுந்தரம் அவர்கள் (17-11-1930), ‘இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம்’ என்ற அமைப்பின் செயலாளராக ஏறத்தாழ அரை நூற்றாண்டுக் காலம் தொடர்ந்து செயற்பட்டு வந்துள்ளவர். அப்பொறுப்பின் அடிப்படையில் மேற்படி இலக்கிய இயக்கத்தின் செயல்திட்டங்களை வகுப்பதிலும் அவ்வாறு வகுக்கப்பட்ட திட்டங்களைச் செயல்வடிவம் பெறச்செய்து சமூகத்தளம் நோக்கி இட்டு வருவதிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பு செய்து வந்துள்ளவர், அவர். அவ்வாறான செயற்பாடுகளின் ஒரு பகுதியாக அவர் எழுத்தில் பதிவு செய்தவற்றுள் ஒரு பகுதியே இங்கு […]காட்சி

Nov 5th, 2011 | By | Category: இதழ் 34, கவிதைகள்

உச்சாணிக்கிளைக்குக் கீழ்க்கிளை
அமர்ந்த பறவை
‘தெரியும்’ ‘தெரியும்’
என்று அலறியது
வான் நோக்கி.
அணில்கள் தாவி மறைந்தன
‘அப்படியா’ எனக் கேட்டு
பறந்தமர்ந்தன அருகாமைப்
பறவைகள்
‘தெரிந்தால்தான் என்ன?’
என உச்சாணிக்கிளைப்
பறவையின் உச்சாடனம்.
மரம் முழுவதும் கிளைகள்
கிளைகள்தோறும் பறவைகள்.
‘தெரியுமே’ என்றது
கானகம்.ஒரு கவிதையும் : குறிப்புகள் மூன்றும்

Nov 5th, 2011 | By | Category: இதழ் 34, கவிதைகள்

என் துக்கத்தின்மீது பொழியும்
அளவு கடந்த
முரட்டுத்தனமான பனிப் பொழிவை
உன்னில் சுமத்துவதற்கில்லை
தளர்ந்த மூதாட்டியின் பொறுமையோடு
அதனை அகற்ற முயல்கிறேன்வேசியின் மகன்

Nov 5th, 2011 | By | Category: இதழ் 34, கவிதைகள்

இரவை
என் இரண்டு
கண்களாலும் உறங்குகிறேன்
வேசியின் மகன்
என் அற்புத இரவில் ஒன்றை
கடன் வாங்கிச் சென்றதால்
மீள இயலா உறக்கத்தில்
மேலும் இரண்டு நாட்கள்
உறக்கத்திலேயே கரைந்து போயிற்று.சிவப்பு பலூன்

Nov 5th, 2011 | By | Category: இதழ் 34, கவிதைகள்

மகள் என் வயிற்றின் மீது
விளையாடிக்கொண்டிருக்கிறாள்
இடுப்பின் கீழே என் குறிமிதித்து
அவள் வானேறுகிறாள்
நான் அவளைத் தொடவேயில்லை
இரவு
அனைவரும் ஞாபகத்தில் வந்துபோகின்றனர்திருப்பாடுகளின் குறிப்புகள்

Nov 5th, 2011 | By | Category: இதழ் 34, கவிதைகள்

துயர் இறங்கி வரும் அகதியாய்
சுற்றும் முற்றும் இழந்து
அண்ணன் குடும்பத்தோடு
வீதியில் நடந்து கொண்டிருந்தேன்.
மேலே வானில் கெலியும் பொம்பரும்
கீழே எங்கணும் கண்ணி வெடி
விதைக்கப்பட்டிருக்கலாம் என்ற
மனப்பயத்துடன் மெல்ல மெல்ல..
தோளில் சுமையுடன்