கட்டுரைகள்

இரத்தம் சிந்தும் இதயங்கள்

Nov 5th, 2011 | By | Category: இதழ் 34, கட்டுரைகள்

சில மாதங்களுக்கு முன்னர் திரு. பாலமனோகரன் எழுதி வெளியிட்ட ‘இரத்தம் சிந்தும் இதயங்கள்’ அல்லது ‘Bleeding Hearts’ என்னும் நாவலைப்பற்றி ஒரு சில வார்த்தைகள் கூறுமாறு திரு. முரளி கேட்டிருந்தார். ஈழத்து இலக்கிய வரலாற்றிலே மைல் கல்லாக, திருப்புமுனையாக அமைந்த ‘நிலக்கிளி’ என்னும் நாவலின் ஆசிரியருடைய ஆங்கிலப்படைப்பை பற்றி பேசுவதற்கு சந்தர்ப்பம் கொடுத்த முரளிக்கு நன்றியைக் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.பூரண சுதந்திரம் வேண்டி

Nov 5th, 2011 | By | Category: இதழ் 34, கட்டுரைகள்

நடந்தது, 1920தைத் தொடர்ந்து வந்த ஒரு சில வருடங்கள். அது சரித்திரம். அறிந்தவர்கள் ஞாபகத்தில் கொண்டு வரவேண்டியது அவசியம்
1. சந்திப்பு: ஒருவர் பொ. நாகலிங்கம், யாழ்பரமேஸ்வராக்கல்லூரி மாணவர். பரமேஸ்வராக் கல்லூரி எங்கே எனக் கேட்காதீர்கள் யாழ் பல்கலைக் கழகம் ஏப்பம் விட்டு விட்டது. நாகலிங்கம் இளவயது முதலே இடதுசாரிக் கொள்கையில் மாய்ந்தவர். பின்னாளில் இலங்கா சமசமாஜக் கட்சி சார்பாக சில தடவைகள் தேர்தலில் போட்டியிட்டு தோல்விகண்டு களைத்துப் போய் ஒதுங்கிக் கொண்டவர்.இரண்டு காதலியர்

Nov 5th, 2011 | By | Category: இதழ் 34, கட்டுரைகள்

ஊட்டியில் மழைக்காலம் மிகவும் உக்கிரமானது. மரங்கள் மீது சாந்தியடையாத சினம் கொண்ட ஆவிகள் ஏறிக்கொண்டதுபோல, ஒரு விபரீத வரத்தால் அவை ஆவேசமான விலங்குகளாக ஆகிவிட்டதுபோல் இருக்கும். தலைசுழற்றி அவை ஊளையிடும். மார்பிலறைந்துகொண்டு தரையில் இருந்து வேர் பெயர்த்து எம்ப முயலும். ஒரு கட்டத்தில் கட்டிடங்கள் கூட உயிர்கொண்டு விடும். மிரண்ட மாபெரும் மிருகங்கள் போல அவை முனகும். விம்மும். உதடுகள் துடிக்க சிறகுகள் படபடக்க அதிரும்.நாங்கள் அவர்கள்

Nov 29th, 2010 | By | Category: இதழ் 33, கட்டுரைகள்

அம்மா, அப்பா, நான்
அக்கா, தம்பி, சித்தி
நாங்கள் எல்லாம் நாங்கள்.
அலைக்கு அப்பால் வாழும்
அந்த, இந்த ஆட்கள்…
அவர்கள் எல்லாம் அவர்கள்.
ஏறத்தாழ ஒரு நூற்றாண்டுக்கு முன்பு,நாங்கள் அவர்கள் என்னும் தலைப்பில் கிப்ளிங் (Rudyard Kipling,18651936) எழுதிய ஒரு கவிதையின் தொடக்கம் (மேலே எழுந்தமானமாக மொழி பெயர்க்கப்பட்டுள்ளது). ஓர் உலகளாவிய உண்மையை அவர் இங்கு உணர்த்தியிருக்கிறார். எனினும், அனைத்துத் தரப்பினரையும் விளித்து அவர் இதனை எடுத்துரைக்கவில்லை.இனங்களின் கோடுகளை அழித்து அதிகாரத்தை எதிர்த்து வாழ்தல்

Nov 22nd, 2010 | By | Category: இதழ் 33, கட்டுரைகள்

ஒவ்வொருவருடைய வாழ்வும் அவரவர்கள் வாழ்கின்ற காலத்தையும், இருக்கின்ற சமூகங்களையும் பொறுத்து வேறுபடக் கூடியது. அனைத்து நிலப் பரப்புகளுக்கும் நம்மால் எப்படி பயணிக்க முடியாதோ, அவ்வாறே நம்மால் எல்லோருடைய வாழ்வையும் வாழ்ந்து பார்க்கவும் முடியாது. ஆனால் எம்மால் வெவ்வேறு வாழ்க்கை முறைகளையும், கலாசார பண்பாட்டுப் பின்புலங்களையும் வேறு வகைகளால் விளங்கிக் கொள்ள முயல முடியும்.‘பொற்சிறையில் வாடும் புனிதர்கள்’ விடிவை நோக்கிக் குரலெழுப்பியவர்

Nov 7th, 2010 | By | Category: இதழ் 33, கட்டுரைகள்

தொதாண்ணூறுகளில் நண்பர் ராஜஸ்ரீகாந்தன், தெணியானின் “பொற்சிறையில் வாடும் புனிதர்கள்’ நாவலின் சில பிரதிகளை அவுஸ்திரேலியாவுக்கு வருகை தந்த ஒரு குடும்ப நண்பரிடம் கொடுத்தனுப்பியிருக்கிறார். அந்த நண்பரின் குடும்பம் அவுஸ்திரேலியாவில் வசிப்பதற்குக் குடியுரிமை பெற்று வந்தது.உளவியல் நோக்கில் தெணியானின் காத்திருப்பு

Nov 7th, 2010 | By | Category: இதழ் 33, கட்டுரைகள்

இலங்கையின் முற்போக்கு இலக்கியப்பாரம்பரியத்தின் மூன்றாவது தலைமுறையினருள் முக்கியமான ஒருவராகச் சுட்டப்பெறுபவர் தெணியான். ஆசிரியத்துவத்தைத் தனது தொழில்வாழ்க்கை யாக கொண்டுவிளங்கிய அவர் அக்காலத்தே தான் பெற்ற அநுபவங்களை இலக்கியக் கருப்பொருளாக்கி, சிறுகதைகளாகவும் நாவல்களாகவும் தந்துள்ளார்.தெணியானுடைய சமூக வலு

Nov 7th, 2010 | By | Category: இதழ் 33, கட்டுரைகள்

தெணியானுடைய இலக்கிய, அரசியல் வாழ்வையும் வளத்தையும் மதிப்பிடுவதற்கு இப்போது நல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. நமது இலக்கிய திறனாய்வு மரபில், இலக்கியச் செல்நெறிகளுக்கு வழங்கப்பட்ட ஆய்வுச் சிறப்பிடம் இலக்கிய ஆளுமைகளுக்கு வழங்கப்படவில்லை என்கிற நிலை தொடர்ந்து நிலவி வருகிறபோதும் ஆங்காங்கே சில ஆய்வு முயற்சிகள் தனித்தனி ஆளுமைகள் குறித்து இடம் பெறுவது பயன்மிக்கதாகும். அந்த வகையில் தெணியான் பற்றிய இந்த மலர் சிறப்பிடம் பெறுகிறது.வடமராட்சி வாழ்க்கையின் முன்னிலைப் புனைகதை ஆசிரியர்

Nov 7th, 2010 | By | Category: இதழ் 33, கட்டுரைகள்

குறிப்பிட்ட ஒருவரது வரலாற்றுநிலைச் சாதனையையப் புரிந்து கொள்வதற்குச் சுலபமான, அதேவேளையில் சிக்கல்கள் நிறைந்த, ஒரு முறைவழி உண்டு. அந்த அணுகுமுறை நடைமுறைச் சாத்தியமானதல்லவெனினும் ‘ஆய்வு நோக்கு அணுகு’ முறையெனுமளவில் வலுவுடையதென்பதை மறுக்க முடியாது.