தூக்கமாத்திரைகள்

Nov 21st, 2010 | எழுத்தாளர்: | பகுப்பு: கவிதைகள்

…………….
…………….
அதன்பிறகு
“பிரிட்டன்’ ஒன்றை விழுங்குவதிலிருந்து
உறங்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டேன்
எப்போதும் புதிய பதில்கள் இருந்து வந்திருக்கின்றன
ஏன் நித்திரைசெய்ய முடிவதில்லை என்ற கேள்விக்கு

குளியலறையில் தண்ணீரைச் சிந்தவிட்டபடி
கண்ணாடி அதிரக் குலுங்கிவிழும் என்னுடைய கண்ணீர்;
இதற்கு எப்போதும் ஓர் வலுவான சாட்சி
குற்றம் சுமத்துதல்
தப்பித்தல் இரண்டுக்குமிடையே
மாத்திரைகளின் பங்களிப்பு தற்காலிகமானது

நினைவின் உணர்வை
உடம்பின் உயிரை..
இனி தீர்மானிப்பதற்கான உரிமையை
மாத்திரைகளிடமே விட்டுவிடுகின்றேன்

கனவில் பெருகும் குருதிப் பிசுபிசுப்பிலிருந்து
ஓடும் கால்களை விலக்கிக்கொள்வதற்கு..
திருப்பங்களில் தென்படும் பதாகைகளில்
மண்டையோட்டின் கீழ்
துரோகம் எனும் குறியீட்டைத் தவிர்ப்பதற்கு ..

தப்பிக்கமுடியாத விரக்திகளிலிருந்துகொண்டே
தப்பிச்செல்லும் போட்டியில்
விளையாடுவதற்கான முன் ஆயத்தங்களுக்காக ..
காரணங்களும்
மாத்திரைகளின் எண்ணிக்கைகளும் அதிகாரிக்கின்றன

பெரும் சூறாவளிக்குத் தப்பிய
பரிசுப்பொருளின் சிதையாத பாகமாய்
கிடைக்கின்ற தூக்கத்தை அணைப்பேன்

உறக்கத்தின் அμங்கத்தில்
மிதக்கும் திரைகளில் பிடித்த நெருப்பு
உக்கிரமான நடனமாகின்றது..

Comments are closed.