புத்தகங்களும் கதைகளும்

Nov 21st, 2010 | எழுத்தாளர்: | பகுப்பு: இதழ் 33, பத்தி

புத்தகங்களில் கதைகள் இருக்கும். ஆனால் புத்தகங்களுக்குப் பின்னாலும் கதைகள் இருக்கின்றன. சில வருடங்களுக்கு முன் நான் ‘The Guardian Saturday Review’ படித்துக் கொண்டிருந்தபோது ஒரு நாவலின் விமர்சனம் என் கண்களை ஈர்த்தது. நூலின் பெயர் 3 for 24 எழுதிய ஆசிரியர் Jennie Walker. கிரிக்கட் ஸ்கோர் தலைப்பு கொண்ட நூல்கள் எத்தனை இருக்கிறது என்பதைவிட என்னுடைய கவனத்தை கவர்ந்ததுக்கான காரணம் வர்ணையாளரின் முதல் வரிகள்: இந்த புத்கத்தை வாங்க விரும்பினால் நூலை வெளியிட்ட CB Editions US 5 பவுண்கள் அனுப்பிப் பெற்றுக் கொள்ளலாம். இது கூட்டு ஸ்தாபனங்களால் பராமரிக்கப்படும் புத்தகக் கடைகளில் கிடைக்காது. இது தேவைக்கு மட்டும் அச்சிடும் நூல் (print on demand) என்று இந்த குறுநாவலுக்கு குறிப்புரை எழுதிய Nicholas Lezzard தெறிவித்திருந்தார்.

கிரிக்கட் ஆர்வம் என்னுடைய மரபணுவில் இருக்கிறது என்று நினைக்கிறேன். கிரிக்கட் மாட்சுகள் நடக்கும் நாட்களில் தொலைக்காட்சிப் பெட்டியின் முன் என்னுடைய அங்க அசைவுகளைப் பார்ப்பவர்கள் நாட்டு வைத்திய பாஷையில் பித்தம் உச்சிக்கு ஏறிவிட்டது வேப்பிலை அடித்துதான் கலைக்க முடியும் என்பார்கள். கிரிக்கட் பற்றிய இந்த நூலை வாங்கிவிடவேண்டும், காசு அனுப்பி விடவேண்டும் என்றிருந்தேன். ஆனால் பல வேலைகள் மத்தியில் இதைச் செய்ய தவறிவிட்டேன்.   சரித்திர நாவல்களில் தென்படும் வசனம் மாதிரி பல வருடங்கள் உருண்டோடின. இப்போது இந்த நூல் பிரித்தானிய பிரபல பிரசுராலயமான Bloombury நிறுவனத்தினால் பதிப்பிக்கப்பட்டிருக்கிறது. இவர்கள் தான் Harry Potter நூல்களையும் வெளியிட்டவர்கள்.

கதைக்கு பின்னால் இருந்த கதை

இந்த நாவல் பிரசுரிக்கப்பட்ட பின் புலத்தைப் பற்றியே ஒரு புத்தகம் எழுதிவிடலாம். நூல் வேண்டுமானால் அதன் வெளியீட்டாளரைத் தொடர்பு கொள்ளுங்கள் என்ற செய்தியை சொல்லிந்தேன் அல்லவா. அந்த பதிப்பகம் அவருடைய நூலை வெளியிடுவதற்கு என்றே அதன் ஆசிரியராலேயே உருவாக்கப்பட்டது. அவருடைய செலவில் ஒரு குடிசைக் கைத்தொழில் போல் இந்த நூலை வெளியிட்டிருக்கிறார். இன்றைய மடிக் கணினியில் கோப்பி போடுவதைத் தவிர எதையுமே சாதிக்கலாம். இந்த நூலை எழுதி ஒரு பதிப்பகத்துக்கு அனுப்பிருந்தார். ஆனால் அது திரும்பி வந்துவிட்டது. அது நிராகரிக்கப்பட்டு வந்த அன்றைய தினமே இவருடைய உறவினர் ஒருவர் அவருடைய உயிலில் ஒரு தொகையை இவருக்கு எழுதி வைத்திருந்த செய்தி அதே தபாலில் கிடைத்தது. அந்தப் பணத்தை வைத்து இந்த நாவலை பிரசுரித்திருந்தார். ‘கார்டியன் ’ பத்திரிகையின் குதூகலமான விமர்சனம் ஒரு பெரிய பதிப்பாளர்களின் கண்களில் பட்டிருக்கிறது. மிகுதி வரலாற்றுப் பதியர்கள் கூறுவது போல் சரித்திரமாயிற்று. அதன் விளைவு, ஒரு நூறு பிரதிகள் மட்டுமே விற்றிருக்கவேண்டிய இந்த நூல் இப்போது பல ஆயிரங்கள் விற்பதற்கான வாய்ப்பு கிட்டியிருக்கிறது.

‘கார்டியன்’ விமர்சகர் இந்த புத்தகம் ஏற்படுத்திய மயக்கத்தில் அந்த ஆண்டுக்கான Orange Prize இந்த நூலை எழுதிய Jennie Walkeக்கு கொடுக்கப்பட வேண்டும் என்று சிபாரிசு செய்திருந்தார். இலக்கிய விஷயங்களில் மெலிதான ஈடுபாடு உள்ள வர்களுக்குக்கூட இந்த பரிசு ஆண்டு தோரும் சிறந்த நாவலை எழுதும் பெண் எழுத்தாளர்களுக்கு வழங்கப்படுவது என்பது தெரிந்திருக்கும். இப்பொழுது இந்த நூலை எழுதியவர் பெண் அல்ல, ஆண் என்று தன்னைத்தானே வெளியேற்றம் செய்திருக்கிறார். அவரின் பெயர் Charles Boyle. இப்பொழுது CB Editions பின்னால் இருக்கும் எழுத்துகளின் சுருக்கத்தின் குறி முறைகளைக் கட்டுடைக்க விண்வெளி விஞ்ஞானியின் அறிவு வேண்டியதில்லை Orange Priceக்கு தகுதியில்லாவிட்டாலும் Charles Boyleusக்கு இன்னொரு பரிசு கிடைத்திருக்கிறது. 2008 ஆண்டுக்கான McKitterick பரிசு. இது என்ன பரிசு என்ற இலக்கியத்தில் ஆர்வமுள்ளவர்கள் அந்தμப்பட்டு உலகம் அளாவிய வலையை (World Wide Web) மேயத் தொடங்கு முன் அங்கு கண்டறிந்ததை நானே செல்லிவிடுகிறென். இது நாற்பது வயதிக்கு மேற்பட்டவர்கள் எழுதும் முதல் நாவலுக்குக் கொடுக்கப்படுகிறது. பரிசு தொகை 4000 பவுண்கள். இந்தப் பரிசுக்கான நிரந்தர வலுவை ஏற்படுத்திய கூடிய Mckitterick ஒரு நாவலை எழுதியிருந்தார். அது பிரசுரமாகவில்லை.

வாழ்வும் விளையாட்டும்

கையடக்கமான 136 பக்கங்கள் கொண்ட இறுக்கமான நாவலின் பலம் கதைப் பின்னல் அல்ல. சம்பிμதாயமான விஷயங்களைத்தான் சித்திரித்தாலும் கதையை முன்னிலைப்படுத்தி நேர் கோட்டுப்போக்கில் சொல்லப்படும் மரபுக்குச் சற்று தறானது. மனித உறவுகள், அவற்றில் எற்படும் பிளவுகள், சிக்கல்கள்,சிணுக்கங்கள், இடர்கள் இந்த நாவலில் உண்டு. கதை சொல்லும் ஒரு மணமான பெண். அவளுடைய பெயரைத் தெரிவிக்காமலேயே கதை நகர்கிறது. அவளுக்கு ஒரு காதலன். அவனுடையபெயர் கூட வாசகர்களுக்கு அறிமுகப் படுத்தப்படவில்லை. அவனின் தொழில் நட்ட ஈடு மத்தியஸ்தம் செய்யும் தரகர் வேலை. அவளுடைய கணவன் Alan, மறுதார மகன் Stephen மற்றும் அவர்களின் போலாந்து நாட்டு பணிப் பெண். இந்த நாவலில் தமிழ் பெயர் கொண்ட சிதம்பரம், அவருடைய மனைவி, ஜீவீதா என்ற அவர்களுடைய மகளுக்கும் ஒரு சின்னப் பங்குண்டு

இந்த நூல் வித்தியாசப்படுவதற்குக் காரணம் கிரிக்கட் ஆட்டம் இந்த கதாபாத்திரங்களுடன் இழைக்கப்பட்டு ஒரு உருவக அணியாக பயன்படுத்தப்பட்டிருப்பதுதான். நாவல் இங்கிலாந்திற்கும் இந்தியாவுக்கும் நடக்கும் டெஸ்ட் போட்டியில் முதல்நாள் தொடங்குகிறது. இந்த ஆட்டத்தைப்பற்றி ஒன்றுமே அறிந்திராத அந்த முக்கிய பெண் கதாபாத்திμம் அவளுடய காதலனின் கட்டிலில்படுத்தவாரே தொலைக்காட்சியில் ஒளிபμப்பிக்கொண்டிருக்கும் இந்த ஆட்டதின் துலக்கமில்லாத விதிமுறைகள் பற்றி விசாரிக்கிறாள். அவன் விளக்கினால் இன்னும் குழப்பாமாகி விடும் என்று விலகிக் கொள்கிறான். அதற்கு மாறாக அவளுடைய கணவன் படங்கள் வரைந்து மதபணியாளரின் ஆர்வத்துடன், திடல் நிலைகள் (fielding positions) பற்றி ஒரு கருத்தரங்கமே நடத்துகிறான். கதை நகர அவளுடைய வாழ்வும் மாறுகிறது. இந்த விளையாட்டுமீது அவளுக்கு ஒரு ஆர்வமும் எற்படுகிறது. இந்த விசித்திரமான தனிபண்புகளுடைய ஆட்டத்துக்கும் அவளுடைய நிகழ் வாழ்வுசம்பங்களுக்குமிடையே பல இணைப்போக்குகளைப் பார்க்கிறாள். இந்த ஆட்டம் அவளுக்கு தற்செயலான வடிவத்தையும் அர்த்தத்தையும் கொடுக்கிறது. விளையாட்டுப் பிரியர்கள் மட்டுமல்ல கிரிக்கட்டின் நுண்ணிய வடிவங்களினால் திகைப்படைந்திருப்பவர்களும் திருப்தியடைய இந்த பிரதியின் கூறுமுறையில் பல மெய்யியல் கருத்துகள் கொண்ட பதிவுகள் இருக்கின்றன.

ஆவென்று உங்களை வாய்விட்டு சிரிக்கவைக்காவிட்லும் உங்களின் உதட்டின் தசைகளை மெலிதாக அசைக்க வைக்கும் நகைச்சுவை மிகுந்த வாக்கியங்கள் இந்த நாவலில் இருக்கின்றது. உங்கள் இலக்கிய சுவை நாட்டத்தை அதிகரிக்க ஒன்றிரண்டை தமிழாக்கலாம் என்று முயன்றேன். ஆனால் என் தமிழ் மொழி யாக்கத்தில் பிரதியின் வரிகள் தமிழ் சினிமாவில் வரும் கீழ்த்தர காமடி வசனங்கள் போல் உருவேடுத்திருந்தன. ஆகையினால் இந்தப் பணியை கைவிட்டுவிட்டேன்.

இந்த நாவலின் கதை சொல்லியை வசியப்படுத்திய கிரிக்ட்டின் தனித்தன்மைகளில் ஒன்று இந்த ஆட்டம் தரும் இரண்டாவது இன்னிங்ஸ். இது மற்ற விளையாட்டுகளில் இல்லாத சிறப்பம்சம். இந்த வாய்ப்பு அவளுக்கு மறுபிறவிக்கு சமானமானது போல் தோன்றுகிறது. ஆனால் பழையவற்றை மறந்து தூய்மையாக்கப்பட்ட கற்பலகை போல் வாழ்க்கையைப் புதிதாக தொடங்க முடிவதில்லை. கர்மகோட்பாடு போல் மிஞ்சியுள்ள பலன்கள் அடுத்த ஆட்டத்துக்கு/அடுத்த பிறவிக்குக் கொண்டுசெல்லப்படுகின்றன. மட்டை வீச்சாளருக்கு/தனிமனிதனுக்கு முந்திய செயல்பாடுகளை சரி செய்ய, திருத்த,எதிர்க்க மட்டுமல்ல புதிய நடத்தைக் கோலங்களை உருவாக மறு வாய்ப்பு தருகிறது.

ஒபாமாவும் கிரிக்கட்டும்

கிரிக்கட் பற்றி அனா ஆவனா தெரியதவர்கள் கூட விரும்பி படிக்கும்படியாக ஒணிண்ஞுணீட Joseph O’Neill எழுதிய ‘Netherland’ என்ற இன்னொரு நாவல் சென்ற ஆண்டு வெளிவந்தது. இந்த நாவல் அமெரிக்க ஜனாதிபதி பாμõக் ஒபாமா தன்னுடய படுக்கை அறை வாசிப்புப் பட்டியலில் இடம் பெற்றிருக்கிறது என்ற செய்தி விற்பனையை அதிகரிக்க உதவியது. 24 for 3யில் இந்த விளையாட்டின் விதி முறைகள் விளக்க முயற்சி எடுக்கப்படுகிறது. ஆனால் Netherlandலின் கிரிக்கடின் புகவிடாத்தன்மை ((impenetrability) தெளிவாக்கப்படாமலேயே விடப்பட்டிருக்கிறது. ஆகையினால் கிரிக்கட் கலாச்சாரமற்ற அமெரிக்கச் சூழ்நிலையில் வளர்ந்த ஒபாமாவுக்கு இந்த நாவலில் அப்படி என்ன பிடித்திருக்கும் என்று நினைத்துப் பார்த்தேன். இந்த நாவலில் வரும் முக்கிய பாத்திரங்களில் ஒன்றான Chuck Ramkisson ஆளுமை காரணமாக இருக்கலாம். ஒபாமாவைப் போலவே ஆசார வாக்கியங்களை Ramkisson உபயோகிக்கிறான். ஒபாமா வின் Ramkisson மாதிரி Ramkisson வின் பொன்வாசகம் Think Fantastic. மற்றது Ramkisson காணும் கனவு. Trinidadian ஆன Ramkisson கிரிக்கட்டை அமெரிக்காவுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்பதுதான் அவனுடைய வருங்காலத் திட்டம். அமெரிக்காவின் விளிம்பு நிலையில் வாழும் குடியேற்றவாசிகளான இந்தியர்கள், கிஸ்தானிகள், இலங்கையினர், மேற்கிந்திய தீவினøμக் கொண்ட பல் இன, பல் சமய ஆட்டக்குழு அமெரிக்காவிற்கு முன் உதாμணமாக இருக்கும் என்பதுதான் அவனின் ஆழ்ந்த சிந்தனையாகும். இந்த பன்முகப்பன்பாட்டியம் ஒபாமாவின் அரசியல், சமுக எண்ண இயல்களுடன் ஒத்துப் போவது இந்த நாவலின் கவர்ச்சியாக இருக்கலாம். Ramkisson க்கு ஒரு பாதகமான பக்கமும் உண்டு. அதைப்பற்றி இப்போது பேச வேண்டாம் என்று நினைக்கிறென்.

Netherland நாவலில் லயித்திருந்த போது என் வாசிப்பை ஒரு வாசகம் தடங்கல் செய்தது. Ramkissonனின் காதலியான எலிசா ஒரு கட்டத்தில் கூறுகிறாள்: மக்கள் ஒரு கதைக்காக அலைந்து கொண்டிருக்கிறார்கள். மக்களுக்குக் கதை பிடிக்கும். அமெரிக்கர்களுக்கு 9/11; ஆங்கிலேயர்களுக்கு 7/7; இந்தியர்களுக்கு 26/11. அதுபோல் ஈழத் தமிழர்களுக்கு 18/5. வைகாசி மாதப் பேரழிவுக்குப் பின் ஒரு புதிய கதை நம் சனங்களுக்கு தேவையாயிருக்கிறது, அவசரமாகிறது. காத்திருக்கிறார்கள். யார் சொல்வார்கள்?

Tags: , , ,

Comments are closed.