Posts Tagged ‘ சச்சிதானந்தன் சுகிர்தராஜா ’

கடுதாசி நூல்களும், கையொப்பங்களும் – சச்சிதானந்தன் சுகிர்தராஜா

Apr 26th, 2013 | By | Category: இதழ் 40, பத்தி

என்னுடைய சமீபத்திய விமான பயனங்களில் என் கண்களை உறுத்திய ஒரு காரியம் வழக்கமான கடுதாசி புத்தகங்களுக்குப் பதிலாக பயனிகளின் கைகளிலிருந்த மின்-வாசிப்பான்கள் (e-reader) அல்லது இணைய பலகைகள் (ipad). லக்கமாக்கபட்ட இந்த நாட்களின் நம்முடைய வாசிப்பு முறை மாறிவருகிறது. முக்கியமாக Kindle, Nook போன்ற வாசிப்புக் கருவிகள் வாசிப்பைத் தொழில் நுட்பமாக்கியிருக்கின்றன. இதைத் தெரிந்து கொள்வதக்கு மானிடவியல் அறிவு தேவையில்லை. பொதுவிடங்களில் இருக்கும் போது சும்மா உங்கள் கண்களை சுழலவிட்டாலே தெரிந்துவிடும்.